search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளி கைது"

    சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து ஊழியர் வீட்டில் புகுந்த கட்டிட தொழிலாளி பீரோவில் இருந்த 11 பவுன் திருடிச் சென்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே சென்னிகுளத்தை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மனைவி ஞானவள்ளி. சிவஞானம் கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து ஊழியராக பணி செய்து வருகிறார். இவருக்கும் சிவகிரியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கருத்தப்பாண்டி (39) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் கருத்தப்பாண்டி சென்னிகுளத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவள்ளி வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவின் லாக்கரை மர்ம நபர் உடைத்து உள்ளே இருந்த 11 பவுன் நகைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைகள் சிறியவர்கள் என்பதால் வந்த நபர் யார் என்று தெரியவில்லை.

    இது பற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசில் ஞானவள்ளி புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சித்ரகலா தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பவ இடத்திற்கு கருத்தப்பாண்டி வந்து சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் அருகே இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கருத்தப்பாண்டியை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஞானவள்ளியின் வீட்டில் புகுந்து 11 பவுன் நகையை திருடியதை கருத்தப்பாண்டி ஒப்புக்கொண்டார்.

    மேலும் திருடிய நகையை விற்று செலவு செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கருத்தப்பாண்டி மேலும் இது மாதிரியான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் தடையப்ப தெருவை சேர்ந்தவர் செல்வி(11)(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் படித்து வருகிறார். 

    இந்நிலையில்செல்வியின் பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் அவர் மட்டும் வீட்டின் வெளியே விளையாடிக்  கொண்டிருந்தார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மாரிமுத்து (வயது 19)  என்பவர் அங்கு வந்தார். அவர் செல்வியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். 
    இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மாரி முத்து அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

    இது குறித்து செல்வியின் பெற்றோர் அரியலூர் அனைத்து  மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி, சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரி முத்துவை  போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர். 
    சேதராப்பட்டு அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு அருகே கரசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன், டிரைவர். நேற்று இவரது குழந்தைகள் அருகில் உள்ள தென்னந்தோப்பில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (41) என்பவர் அந்த குழந்தைகளை மிரட்டி விரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை கலையரசனின் மனைவி பாஞ்சாலி (35) கிருஷ்ணமூர்த்தியிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி பாஞ்சாலியை தாக்கினார். மேலும் ஆடையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து கொலை செய்து விடுவதாக பாஞ்சாலியை மிரட்டினார்.

    இதுகுறித்து பாஞ்சாலி சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல், மானபங்கம் செய்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே இதுபோல் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவில்பட்டியில் தனியார் மருத்துவனையில் பணிபுரியும் நர்ஸ் வீட்டில் நகையை கொள்ளையடித்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மந்தி தோப்பு ரோட்டில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அங்கயர்செல்வி (வயது35). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று இவர்கள் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்பொழுது வீட்டில் பீரோ அரிவாளால் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் கதவு திறக்கப்படாமல் பீரோ மட்டும் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை திறந்து பார்த்தனர்.

    அப்போது உள்ளே இருந்த 6 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கணேசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் பீரோவை உடைத்து நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். #Tamilnews
    ×